இவ்வருடம் தரம் 10, 11 இல் கற்கின்ற மாணவர்களைத் தவிர ஏனைய அனைத்து மாணவர்களும் (தரம் 1-9) நாளை தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இலவச பாடநூல் அனைத்தையும் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு புதிய பாடநூல்களை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகன்றீர்கள்.
மேலும், புதிய பாடநூல் வழங்கப்பட இருப்பதனால் நாளைய தினம் அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு கட்டாயமாக சமூகம் தருமாறு வலியுறுத்தப்படுகின்றீர்கள்.
*அதிபர்*
எமது பாடசாலையில், 2026 இல் தரம் 6 க்கு புதிய பெண் மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
கற்க தகைமையுள்ள மாணவிகள், நாளை (19.12.2025) முதல் பாடசாலையில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
பூரணமாக நிரப்பிய விண்ணப்ப படிவங்களை எதிர்வரும் 28.12.2025 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் பாடசாலையில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
*விண்ணப்ப முடிவுத் திகதி: 28.22.2025*
அன்புள்ள பெற்றார்களே, மாணவர்களே நலன் விரும்பிகளே!
*இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சகோதர மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குதல்*
எமது நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு ஆகிய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சகோதர மாணவர்கள் தங்களின் கற்றல் உபகரணங்கள் இன்றி கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் இக்கட்டான நிலைமைக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டிய தார்மீக கடமையில் இருக்கின்றோம்..
எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான *கற்றல் உபகரணங்கள்* (புத்தகப் பைகள், சப்பாத்துக்கள், சீருடைகள் அல்லது சீருடைத் துணிகள், அப்பியாச கொப்பிகள் பென்கள், பென்சில்கள், ரப்பர்கள், காகிதங்கள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள்) வழங்க ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களால் முடிந்த அளவிற்குள் உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
*உங்கள் சிறிய உதவி கூட ஒருவர் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.*
உங்களது உதவிப் பொருட்களை எதிர்வரும் *15, 16 ஆம் திகதிகளில்* பாடசாலை உதவி சேகரிப்பு மையத்தில் அல்லது வகுப்பாசிரியர்களிடம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புக்குரிய பெற்றோர்களே உங்களின் பிள்ளைகளை அடுத்தவர்களின் கஷ்டத்தில் உதவி செய்கினற மனப்பான்மையை வளர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு உங்கள் பிள்ளைகளிடம் கற்றல் உபகரணங்களை வாங்கிக் கொடுத்து உங்கள் பிள்ளைகளின் நற்பண்புகளை வளர்ப்பதற்கும் உதவி செய்து பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும் உதவி செய்ய முன் வாருங்கள்.
"கற்பவனாக இரு, கற்பிப்பவனாக இரு, கற்பவனுக்கு உதவுபவனாக இரு, நான்காமவனாக (அழிந்துபோனவன்) இருந்துவிடாதே" என்பது ஒரு நபிமொழியாகும்.
*"கொடுக்கும் கையே எப்போதும் மேலானது!"*
*அதிபர்*


Hello Everyone,
As the Deputy Principal, I am excited to support our students and staff in achieving our shared goals. I believe in the power of collaboration and community, and I encourage everyone to engage actively in our school activities. Together, we can create a positive and enriching learning experience for all.
Best wishes,
Mr .AK. Naleem
Deputy Principal
AK/AL-Hidaya ladies' college.
AK/AL- Hidaya ladies' college- Palamunai
© 2026 KM/AK/AL- HIDAYA LADIES' COLLEGE, PALAMUNAI - AKKARAIPATTU. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk