சர்வதேச அரபு மொழி தினத்தை முன்னிட்டு, பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரியில் (18.12.2026 ) இன்று சிறப்பான முறையில் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு கல்லூரியின் பிரதி அதிபர் அல்ஹாஜ் மௌலவி ஏ. கே. நழீம் சர்கி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் உதவி அதிபர்கள் A. M. Aleem (VP), U. L. Aswath (VP), இஸ்லாம் பாட ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராக கலந்து கொண்ட பிரதி அதிபர் அல்ஹாஜ் மௌலவி ஏ. கே. நழீம் சர்கி அவர்கள் அரபு மொழியின் முக்கியத்துவம், அதன் வரலாற்றுப் பின்புலம் மற்றும் இன்றைய உலகில் அதன் பயன்பாடு குறித்து விஷேட உரையாற்றினார்.
மேலும், மாணவிகளின் கலை நிகழ்வுகள், அரபு மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பாடசாலை சமூகம் ஒன்றிணைந்து இத்தினத்தை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடியது.
இந்நிகழ்வை ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நடத்துவதில், கல்லூரியின் அதிபர் MTM. Siyath (SLPS) அவர்களின் வழிகாட்டலும் மேற்பார்வையும் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.





